Victoria 2026
வித்தியாசமான விளையாட்டுகள், வித்தியாசமானதொரு இடத்தில்
‘Victoria 2026’ விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் அநேகம் உள்ளன, ஆகவே விக்டோரிய வாசிகள் தமது விளையாட்டுப் போட்டிகளை எவ்வாறு கொண்டாட விரும்புகிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம். பார்வையாளர்களாக இருப்பதில் தொடங்கி வர்த்தக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கும் தன்னார்வலர்களாக இருப்பது வரை ‘Victoria 2026’ விளையாட்டுப் போட்டிகளில் வாய்ப்புகளுக்குக் குறைவே இல்லை.
‘Commonwealth Games’ விக்டோரியாவில் கொண்டாடப்படவிருக்கும் இந்த நிலையில், விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும், வருகையாளர்களையும் வேறு எதற்கும் இல்லாத அளவில், இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக விக்டோரிய மாநிலத்தின் பிராந்தியங்களுக்கு வரவேற்க நாம் ஆவலாய்க் காத்திருக்கிறோம்.
‘Victoria 2026’ விளையாட்டுப் போட்டிகள் 17-29 மார்ச் 2026-இல் நடைபெறும், அத்துடன் விக்டோரியா முழுவதும் உள்ள மக்களுக்குப் ‘பல-நகர’ மாதிரி ஒன்றை அளிக்கும் வகையில் ‘பலராட்’, பெண்டிகோ’, ‘ஜிலோங்க்’, மற்றும் ‘கிப்ஸ்லண்ட்’ ஆகிய பிராந்திய மையங்களைக் கொண்டதாக இந்த விளையாட்டுப் போட்டிகள் இருக்கும்.
‘Victoria 2026’ விளையாட்டுப் போட்டிகள் நமது மாநில மக்களின் வலிவுகளைக் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமையும். பிராந்திய ஆஸ்திரேலியா இந்த உலகிற்கு அளிக்கவிருக்கும் மிகச் சிறந்த உணவு மற்றும் மது வகைகள், அபாரமான கலைகள் மற்றும் கலாச்சாரம் மற்றும் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் போன்ற அனைத்தையும் இது முன்னெடுத்து வைப்பதாகவும் இருக்கும்.
சமூகங்களில் செய்யப்படும் முதலீடுகள், மற்றும் கட்டுபடியாகக் கூடிய வீட்டுவசதிகள் மற்றும் விக்டோரிய மாநிலத்தின் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் புத்துணர்வூட்டும் விளையாட்டு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும் பாரம்பரியம் ஒன்றையும் இந்த விளையாட்டுப் போட்டிகள் விட்டுச்செல்லும், மற்றும் இந்தப் பாரம்பரியமானது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலத்தையும் கடந்து நீடித்து நிற்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொதுவானவை
-
தன்னார்வலருக்கான வாய்ப்புகள், டிக்கெட்டுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய புதுச் செய்திகளைப் பெற நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
-
‘ஜிலோங்க்’, ‘பெண்டிகோ’, ‘பலராட்’ மற்றும் ‘கிப்ஸ்லண்ட்’ ஆகிய பிராந்திய மையங்களுக்கு உலகளாவிய விளையாட்டைக் கொணரும் வகையில் புதியதொரு ‘பல-நகர’ மாதிரி ஒன்றை Commonwealth Games- ல் முதல் முறையாக ‘Victoria 2026’ விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தும்.
-
இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய மிக சமீபத்திய செய்திகள் அனைத்தையும் பெறுங்கள்.
-
‘Victoria 2026’-ற்கான கால அட்டவணை இனிதான் வெளியிடப்படவிருக்கிறது. மிகச் சமீபத்தியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்.
-
‘பலராட்’, ‘பெண்டிகோ’, ‘ஜிலோங்க்’ மற்றும் ‘கிப்ஸ்லண்ட்’ ஆகிய நான்கு நகரங்களிலும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் நகரங்களாக அமையும். இந்த நான்கு நகரங்களுக்கு அப்பாற்பட்டு, மற்ற பிராந்திய நகரங்கள் இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஆய்ந்துவருகிறோம்.
-
வர்த்தகம் மற்றும் சமூக அமைப்புகள் - ஆர்வ வெளிப்பாட்டுப் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்யுங்கள். இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்ள 15 வேலை நாட்கள் வரை ஆகலாம்.
-
‘Victoria 2026’ விளையாட்டுப் போட்டிகளுக்கான தேதிகள் 17-29 மார்ச் 2026 ஆகும். ‘Commonwealth Games’ தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என நாங்கள் அடையாளம் கண்டுள்ள பிரதானமான நிகழ்ச்சிகளின் திட்டமிடுதல்கள் தொடர்பாக அவற்றுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றிவருவோம்.
-
‘Victoria 2026’-இன் ஒரு பகுதியாக இருக்குமாறு பாடசாலைகளையும், பாடசாலைச் சமூகங்களையும் ஈடுபடுத்துவதற்கான திட்டம் ஒன்றை உருவாக்க எமது அணியினர் தீவிரமாய்ச் செயல்பட்டுவருகின்றனர். எமது சமூக ஊடகச் சேனல்களைத் தொடர்ந்து பாருங்கள், அத்துடன் புதுச் செய்திகள் கிடைக்கும் பொழுது அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள எமது வலைத்தலத்தினைப் பாருங்கள்.
வேலைவாய்ப்புகள்
-
உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றி. விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் துவங்கும் நிலையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அவற்றைப் பற்றிய விளம்பரங்கள் வெளியிடப்படும். வேலைக்கான விளம்பரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பதிவு செய்யுங்கள் .
தன்னார்வலராகப் பணிசெய்தல்
-
இது ஒரு அபாரமான செய்தி! தன்னார்வலராகப் பணியாற்றும் வாய்ப்புகள் எப்போது கிடைக்கும் என்பதை உள்ளடக்கிய விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள பதிவுசெய்யுங்கள்.
டிக்கெட்டுகள்
-
டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை, ஆனாலும், டிக்கெட்டுகள் வெளியிடப்படுவதைப் பற்றிய தகவல்கள் உள்ளடங்க, விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள பதிவுசெய்யுங்கள் .
ஊடகங்கள்
-
எம்முடன் தொடர்பு கொண்டமைக்கு நன்றி. commonwealthgames@sport.vic.gov.au எனும் மின்னஞ்சல் மூலமாக எமது அணியினருடன் தொடர்புகொள்ளுங்கள், அவர்களால் உங்களுடைய விசாரிப்பு சம்பந்தமாக உங்களுக்கு உதவ இயலும். உங்களுடைய பெயர், உங்களுடைய அமைப்பு, உங்களுடைய ஊடகம் (தொலைக் காட்சி, வானொலி,
‘போட்காஸ்ட்’, ‘வீடியோ’, இணையதளம், மற்றும் ஏனையவை) மற்றும் உங்களுடைய கால-வரையறை ஆகியவற்றை அதில் தெரிவியுங்கள்.
விளையாட்டுகள்
-
இந்த விளையாட்டுப் போட்டிகளில் உள்ள விளையாட்டுகள் யாவை என்பதைத் தெரிந்துகொள்ள விளையாட்டுப் போட்டிகள் பக்கத்துக்கு செல்க. இந்த நிகழ்ச்சியில் இன்னும் அதிகமான விளையாட்டுகள் சேர்க்கப்படக்கூடும்.
-
விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கூடுதல் விளையாட்டுகளை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஆய்ந்துவருகிறோம். இந்த ஆண்டின் பிற்பகுதியில் விளையாட்டுகளைப் பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தை நாங்கள் இறுதிப்படுத்துவோம்.
க்வீன்’ஸ் பேட்டன் ரிலே’ (Queen's Baton Relay)
-
‘Commonwealth Games’-ன் துவக்கத்திற்கான கால நெருக்கத்தைக் குறிக்கும் ‘க்வீன்’ஸ் பேட்டன் ரிலே’ எனும் ‘தொடர் ஓட்டம்’ ‘Commonwealth Games’ நாடுகள் முழுவதும் உள்ள சமூகத்தினரைப் போற்றி, அவர்களை உள்ளடக்கி இணைக்கும் ஒரு பாரம்பரியச் செயற்பாடாகும். ‘பேட்டன்’ எனப்படும் இந்தக் குறுந்தடியானது ஆஃப்ரிக்கா, அமெரிக்கக் கண்ட நாடுகள், கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஓஷியானியா வழியாக ‘Commonwealth’-ஐச் சேர்ந்த 72 தேசங்கள் மற்றும் பிரதேசங்களுக்குச் செல்லும். ‘Commonwealth’ நாடுகளுக்கும், இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் மாட்சிமைமிகு இராணியார் அவர்கள் விடுக்கும் செய்தி ஒன்றை இந்தக் குறுந்தடி கொண்டிருக்கும்.
Reviewed 10 November 2022