பிள்ளைகள் ஏன் அதிகம் நகர வேண்டும்
5-12 வயதிற்கு இடையிலான குழந்தைகளும் மற்றும் 13-17 இடையிலான இளைஞர்களும் ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதனை எளிதாக்க, இதை ஒரு நாளைக்கு 4 தடவைகள் என 15 நிமிடங்களுக்கு பிரித்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
உடல் செயல்பாடு என்பது உங்கள் உடலை நகர செய்கின்ற, உங்களை வேகமாக சுவாசிக்கச் செய்கின்ற மற்றும் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் எந்தச் செயல்பாடும் ஆகும். உடல் செயல்பாடு குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செய்கிறது, மேலும் அவர்கள் வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.
ஒவ்வொரு நாளும் நகர்வது பல நன்மைகளை அளிக்கிறது, இதில் அடங்குபவை:
- மேம்பட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியம்
- அதிக ஆற்றல்
- மோசமான ஆரோக்கியம், நோய்கள் மற்றும் அனாரோக்கிய எடை அதிகரிப்பு ஆபத்துக் குறைவு
- நல்ல இரத்த அர்த்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள்
- நண்பர்களுடனும் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக இருத்தல்
- குறைந்த சமூக எதிர்ப்பு நடத்தை
- அதிக ஒத்துழைப்பு மற்றும் குழுப்பணி திறன்கள்
- சிறந்த சுயமரியாதை மற்றும் நம்பிக்கை
- குறைந்த பதட்டம் மற்றும் மன அழுத்தம்
- சிறந்த ஒருமுகப்படுத்தல்
- ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் போஷாக்கு
- வலுவான தசைகள் மற்றும் எலும்புகள்
- மேம்பட்ட உடற்தகுதி, ஒருங்கிணைப்பு மற்றும் இயக்கம்
ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள், 4 தடவைகள்
நாங்கள் உடல் செயல்பாட்டை ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் 15 நிமிடங்களுக்கு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
இந்தச் செயல்பாடுகளில் அடங்கக்கூடியவை:
- பள்ளிக்கோ அல்லது உங்கள் அக்கம்பக்கத்தைச் சுற்றியோ நடத்தல் அல்லது சவாரி செய்தால்
- நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லல்
- நண்பர்களுடன் பூங்காவிற்கு செல்லுதல்
- கால்பந்து
- பனிச்சறுக்கு
- முற்றத்தில் விளையாடுதல்
- டென்னிஸ்
- நீச்சல்
- நடனமாடுதல்
- ஓடுதல் அல்லது ஜாக்கிங்
- கூடைப்பந்து
- ஏறுதல்
- யோகா
- எடை தூக்குதல்
- நெட்பால்
Reviewed 07 December 2022