Victoria government logo

இழிவுபடுத்தல்-எதிர்ப்பு பாதுகாப்புகள் பற்றிய விசாரணைக்கான மறுமொழி - Response to the Inquiry into Anti-Vilification Protections - தமிழ் (Tamil)

The government wants to reduce hate crime and vilification in Victoria. This page provides information about how the government is working to improve protections against vilification.

இழிவுபடுத்தல் (vilification) என்றால் என்ன?

இழிவுபடுத்தல் (Vilification)External Link என்பது ஒரு நடத்தை. இது ஒரு நபரின் இனம் அல்லது மதத்தின் காரணமாக, வெறுப்பு (hatred), தீவிர அவமதிப்பு (serious contempt), வெறுப்புணர்வு (revulsion) அல்லது கடுமையான கேலி (severe ridicule) போன்றவற்றைத் தூண்டுகிறது அல்லது ஊக்குவிக்கிறது. அது ஒரு நபர் அல்லது ஒரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக இருக்கலாம்.

இழிவுபடுத்தலின் எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:

  • இணையத்தில் இனவெறிக் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம், பிற மக்கள் ஒரு நபரை வெறுக்கவோ அல்லது கேலி செய்யவோ செய்யலாம்
  • பொதுக் கூட்டம் அல்லது பேரணியில், இனம் அல்லது மதத்தின் அடிப்படையில், ஒரு மக்கள் கூட்டத்தை அவமதிப்பதை ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்
  • ஒரு இன அல்லது மதக் குழுவை வெறுக்கும் வகையில் மக்களை ஊக்குவிக்கும், சுவர்க் கிறுக்கல்களை (graffiti) எழுதுதல்

விக்டோரியாவில், இன மற்றும் மதச் சகிப்புத்தன்மைச் சட்டம் 2001External Link , இழிவுபடுத்தலைத் தடுக்கிறது. பொது இடங்களில் நடக்கும் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை இழிவுபடுத்துவதில் இருந்து, இது பாதுகாக்க முடியும். உடல் ஊனம் (disability), பாலினம் (gender) அல்லது பாலியல் நோக்குநிலை (sexual orientation) ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் இழிவுபடுத்தலை இது உள்ளடக்காது.

இழிவுபடுத்தல் என்பது, பாகுபாடு (discrimination) மற்றும் பாலியல் துன்புறுத்தல் (sexual harassment) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது

பாகுபாடு (Discrimination)External Link என்பது, சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட தனிப்பட்ட குணாதிசயத்தின் காரணமாக, ஒரு நபரை மோசமாக அல்லது நியாயமற்ற முறையில் நடத்துவதாகும் (எடுத்துக் காட்டாக, அவர்களின் வயது, உடல் ஊனம் அல்லது பாலின அடையாளம் (gender identity)).

பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment)External Link என்பது விரும்பத்தகாத பாலியல் நடத்தை ஆகும், இது ஒருவருக்குப் புண்படுத்தும் (offended), அவமானப்படுத்தப்படும் (humiliated) அல்லது பயமுறுத்தும் (intimidated) உணர்வைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய குறிப்பால் உணர்த்தும் ஆபாச நகைச்சுவைகள் (suggestive jokes) அல்லது ஊடுருவும் கேள்விகள் (intrusive questions) இதில் அடங்கும்.

பொது வாழ்வின் சில பகுதிகளில் (உதாரணமாக, வேலையில், பள்ளியில் மற்றும் கடைகளில்), பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது, சம வாய்ப்புச் சட்டம் 2010 (Equal Opportunity Act 2010)External Link , அவை சட்டத்திற்கு எதிரானவை என்று குறிப்பிடுகிறது.

விக்டோரியாவில் இழிவுபடுத்தல்-எதிர்ப்பு (Anti-Vilification) பாதுகாப்புகள் பற்றிய விசாரணை

விக்டோரியாவின் இழிவுபடுத்தல்-எதிர்ப்புச் சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை, சட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகள் குழு ஆய்வு செய்தது. இந்தக் குழுவானது, விக்டோரிய நாடாளுமன்றத்தில் (Victorian Parliament) உள்ள சட்டமன்றத்தின் (Legislative Assembly) ஒரு பகுதியாகும்.

குழுவானது, தனது விசாரணையின் ஒரு பகுதியாக, பொது சமர்ப்பிப்புகளைக் (public submissions) கேட்டுள்ளது. குழுவானது, 62 எழுத்துப்பூர்வச் சமர்ப்பிப்புகளையும், 11 துணை சமர்ப்பிப்புகளையும் பெற்றுள்ளது. இது மெல்போர்னில் நேரிலும், காணொளி இணைப்பு (video link) மூலமாகவும், ஏழு நாட்கள் பொது விசாரணைகளை நடத்தியுள்ளது.

3 மார்ச் 2021 அன்று இழிவுபடுத்தல்-எதிர்ப்பு பாதுகாப்புகள்External Link (அறிக்கை) பற்றிய தனது அறிக்கையைக் குழு வெளியிட்டுள்ளது.

பின்வரும் மக்கள் உட்பட, பல விக்டோரியவாசிகளுக்கு, இழிவுபடுத்தல் என்பது பொதுவானது என்று அறிக்கை கண்டறிந்துள்ளது:

  • கலாச்சார ரீதியாக மற்றும் மொழியியல் ரீதியாக, வேறுபட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள்
  • குறிப்பிட்ட நம்பிக்கைக் குழுக்கள் (faith groups) -இடமிருந்து வந்தவர்கள்
  • பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் (Torres Strait Islander)
  • LGBTIQ+ என அடையாளம் காணப்படுபவர்கள்
  • ஊனமுற்றோர்

பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பணியிடங்கள், சேவைகள் மற்றும் இணையத்தில், இழிவுபடுத்தல் நடக்கிறது.

விக்டோரியாவின் இழிவுபடுத்தலுக்கு எதிரான பாதுகாப்புகளை வலுப்படுத்த, 36 பரிந்துரைகளை அறிக்கை செய்கிறது. சில முக்கியப் பரிந்துரைகளில், பின்வருவன அடங்கும்:

  • இனம் மற்றும் மதத்திற்கு அப்பால், இழிவுபடுத்தலுக்கு எதிரான பாதுகாப்புகளை விரிவுபடுத்துதல் (எடுத்துக்காட்டாக, பாலினம் (gender) மற்றும்/அல்லது பாலியல் (sex), பாலின நோக்குநிலை (sexual orientation), பாலின அடையாளம் (gender identity) மற்றும்/அல்லது பாலின வெளிப்பாடு (gender expression), பாலின குணாதிசயங்கள் (sex characteristics) மற்றும்/அல்லது பாலின நிலை (intersex status), உடல் ஊனம் (disability), 'எச்.ஐ.வி.'/'எய்ட்ஸ்' நிலை (HIV/AIDS status) அல்லது தனிப்பட்ட சேர்க்கை (personal association) ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்தலைத் தடுத்தல்)
  • குடியியல் (civil) மற்றும் குற்றவியல் (criminal) இழிவுகளுக்குச் சமமான வரம்புகளைக் குறைத்தல்
  • நாஜி (Nazi) சின்னங்களைப் பொதுவில் காட்டுவதைத் தடை செய்தல்

அரசாங்கத்தின் மறுமொழி

அறிக்கையின் பரிந்துரைகளுக்கு. விக்டோரிய அரசாங்கம் பதிலளித்துள்ளதுExternal Link . அறிக்கையின் 36 பரிந்துரைகளில், கொள்கை 34 -ஐ அரசாங்கம் ஆதரிக்கிறது அல்லது கொள்கை அளவில் ஆதரிக்கிறது.

மாற்றங்களைச் செய்வதற்கான மிகச்சிறந்த வழியை அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. சில பரிந்துரைகளுக்கு, அரசாங்கம் சட்டங்களை மாற்ற வேண்டும். இழிவுகளை அனுபவிக்கும் சமூகக் குழுக்கள் போன்ற விக்டோரிய சமூகத்தின் உள்ளீடு (input), பலவற்றுக்குத் தேவைப்படும். வெவ்வேறு மனித உரிமைகளைக் கவனமாக பரிசீலிப்பது, சிலவற்றுக்குத் தேவைப்படும்.

அரசாங்கத்தின் இனவெறி எதிர்ப்பு சிறப்புப் பணிப்பிரிவும் (Anti-Racism Taskforce)External Link , விக்டோரியாவின் புதிய இனவெறி எதிர்ப்பு உத்தியை (Anti-Racism Strategy) உருவாக்கி வருகிறது. இனவெறி எதிர்ப்பு உத்தி (Anti-Racism Strategy), விசாரணையின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதை நிறைவு செய்யும்.

பொருத்தமான விதிவிலக்குகளுடன், நாஜி சின்னங்களை (Nazi symbols) பொதுவில் காட்டுவதைத் தடை செய்வதற்கான சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். நாஜி சித்தாந்தத்துடன் (Nazi ideology) தொடர்புடைய இந்த சின்னங்களைக் காட்டுவதை, விக்டோரியா பொறுத்துக் கொள்ளவில்லை என்ற தெளிவான செய்தியை இது அனுப்பும். மத, கலாச்சார மற்றும் வரலாற்று மதிப்புள்ள பழங்காலச் சின்னங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதோ அல்லது குற்றமாக்குவதோ நோக்கம் அல்ல.

இந்தச் சட்டத்தை உருவாக்க, விக்டோரிய யூத, இந்து, பௌத்த, ஜைன சமூகத்தினருடன் அரசாங்கம் ஆலோசனை செய்யும்.

பௌத்த மற்றும் ஜைன சமூகங்கள் உட்பட, இந்து மற்றும் பிற நம்பிக்கை சமூகங்களுக்கான (faith communities) 'ஸ்வஸ்திகா' சின்னத்தின் (Swastika symbol) கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.

இந்த நம்பிக்கை சமூகங்களின் உறுப்பினர்களுக்கு, 'ஸ்வஸ்திகா' சின்னம் வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே பொறிக்கப்படவில்லை, ஆனால் பெரும்பாலும் அவர்களின் வீடுகள் மற்றும் மத அமைப்புகளுக்கு வெளியில், ஆசீர்வாதம் மற்றும் அமைதியின் அடையாளமாகக் காட்டப்படுகிறது. இந்தச் சின்னத்திற்கும், நாஜிக்களால் அழைக்கப்பட்ட 'ஹேகன்க்ரூஸ்' சின்னத்துக்கும் (Hakenkreuz symbol) இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதும், விழிப்புடன் இருப்பதும் முக்கியமாகும், அத்துடன் 'ஹேக்கன்க்ரூஸ்' வெறுப்பையும் வன்முறையையும் பரப்பப் பயன்படுத்தப்பட்டது. 'ஸ்வஸ்திகா'வுடன் சில பொதுவான காட்சி அம்சங்களைக் கொண்ட நாஜிக்களின் 'ஹேகன்க்ரூஸ்' சின்னம், தடையில் சேர்க்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்தை மேம்படுத்துவதில், நாஜிக்களின் 'ஹேகன்க்ரூஸ்' மீது முன்மொழியப்பட்ட தடையிலிருந்து இந்த சமூகங்கள் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ளாமல் இருக்க, மத மற்றும் கலாச்சார பயன்பாட்டிற்கான, தெளிவான மற்றும் நிரந்தர விதிவிலக்குகளை உருவாக்க, பாதிக்கப்பட்டக் குழுக்களின் சமூகத் தலைவர்களுடன் நாம் இணைந்து பணியாற்றுவோம்.

இழிவுகளை அனுபவிக்கும் மக்களுக்கு உதவி

அவசரகால உதவிக்கு, எப்போதும் மூன்று பூஜ்யம் (000) என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கவும்.

நீங்கள் இழிவுபடுத்தப்பட்ட அனுபவம் இருந்திருக்கலாம் என நீங்கள் நினைத்தால், நீங்கள் தொடர்பு கொள்ள:

  • விக்டோரியச் சம வாய்ப்பு (Victorian Equal Opportunity) மற்றும் மனித உரிமைகள் ஆணையம் (Human Rights Commission)
    இனம் அல்லது மதத்தை இழிவுபடுத்துதல் பற்றிய புகார்களைத் தீர்க்க உதவுகிறது. சமூகத் தகவல் தெரிவிக்கும் முறைமையைப் (community reporting tool) பயன்படுத்தி இணையத்தில்External Link புகார் செய்யவும், அல்லது 1300 292 153 என்ற தொலைபேசி எண்ணில் VEOHRC -ஐத் தொடர்புகொள்ளவும் அல்லது enquiries@veohrc.vic.gov.au என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்
  • விக்டோரியச் சட்ட உதவியகம் (Victorial Legal Aid)
    சட்டம் பற்றிய இலவசத் தகவல் மற்றும் உதவியை வழங்குகிறது. தொடர்புக்கு: 1300 792 387 அல்லது legalaid.vic.gov.auExternal Link என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
  • விக்டோரியப் பழங்குடியினர் சட்ட சேவை (Victorian Aboriginal Legal Service)
    விக்டோரியாவில் உள்ள பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் மக்களுக்கு (Torres Strait Islander peoples), சட்ட ஆலோசனை மற்றும் தகவல்களை வழங்குகிறது. தொடர்புக்கு: 1800 064 865 அல்லது vals@vals.org.au
  • 'வானவில் கதவு' (Rainbow Door)
    ஓர் இலவச சிறப்பு ஆலோசகர் LGBTIQA+ உதவி இணைப்பு. இது அனைத்து LGBTIQA+ விக்டோரியவாசிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு, ஆதரவையும் பரிந்துரையையும் வழங்குகிறது. 1800 729 367 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும், support@rainbowdoor.org.au என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும், அல்லது 0480 017 246 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (SMS) அனுப்பவும்
  • 'க்யூலைஃப்' (QLife)
    பாலியல் (sexuality), அடையாளம் (identity), பாலினம் (gender), உடல்கள், உணர்வுகள் அல்லது உறவுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைப் பற்றி பேச விரும்பும் நபர்களுக்கு, ஆஸ்திரேலியா முழுவதும் LGBTQIA+ சக ஆதரவையும், பரிந்துரைகளையும் வழங்குகிறது. 1800 184 527 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் அல்லது qlife.org.auExternal Link என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
  • இனவாத அவசர இணைப்புக்கு (racism hotline) முறையீடு செய்யவும்
    விக்டோரிய அரசுப் பள்ளியில், இன மற்றும் மத துஷ்பிரயோகம் (racial and religious abuse) அல்லது பாகுபாடு (discrimination) பற்றிய ஒரு சம்பவத்தைப் பற்றிப் புகாரளிப்பது குறித்து, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்/பராமரிப்பாளர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது. தொடர்புக்கு: 1800 722 476 அல்லது report.racism@education.vic.gov.au
  • 'உடல் ஊன நுழைவாயில்' (விக்டோரியா) (Disability Gateway (Victoria))
    பாகுபாடு காட்டப்பட்ட மற்றும் சமமாக நடத்தப்படாத, ஊனத்துடன் வாழும் நபர்களுக்கு ஆதரவளிக்கும் வழக்காடும் நிறுவனத்திற்குத் (advocady organisation), தகவல்கள் மற்றும் இணைப்புகளை வழங்குகிறது. disabilitygateway.gov.au/legal/advocacy/vicExternal Link என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
  • 'பெற்றோர் இணைப்பு' (Parentline)
    பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு தகுதியான ஆலோசகரின் ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குகிறது. 13 22 89 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்
  • 'இசேஃப்டி' (ESafety) ஆணையர் அலுவலகம்
    இணைய முறைகேடு (online abuse) குறித்த புகார்களுக்குப் பதிலளிக்கிறது. இணைய மிரட்டல் (cyberbullying), உருவப்பட அடிப்படையிலான முறைகேடு (image-based abuse), அத்துடன் எந்தவொரு சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் தொடர்பாகவும், esafety.gov.au/reportExternal Link என்ற இணையதளத்தில் முறையீடுகள் செய்யலாம்
  • 'லைஃப்லைன்' (Lifeline)
    24 மணி நேர நெருக்கடி ஆதரவு (24-hour crisis support)External Link மற்றும் தற்கொலைத் தடுப்புச் சேவைகளை வழங்குகிறது. 13 11 14 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்
  • குழந்தைகள் உதவி இணைப்பு (Kids Helpline)
    5 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களுக்கு 24 மணி நேர ஆலோசனைச் சேவையைExternal Link வழங்குகிறது. 1800 551 800 -ஐ அல்லது counsellor@kidshelpline.com.au -ஐத் தொடர்பு கொள்ளவும்
  • விக்டோரியப் பழங்குடியினர் (Aboriginal) சமூகக் கட்டுப்பாட்டுச் சுகாதார அமைப்பு (VACCHO)
    பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் மக்களுக்கான (Torres Strait Islander peoples) குறிப்பிட்ட ஆதார வளங்கள் மற்றும் தொடர்புகள் பற்றிய ஆலோசனை மற்றும் கூடுதல் தகவல்களை வழங்குகிறது. தொடர்புக்கு: 03 9411 9411 அல்லது vaccho.org.auExternal Link என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
  • 'ஆண்கள் இணைப்பு' ஆஸ்திரேலியா (MensLine Australia)
    ஆண்களுக்கான 24 மணி நேர உதவிExternal Link , ஆதரவு, பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. 1300 789 978 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்
  • தற்கொலைத் தடுப்புச் சேவை (Suicide Call Back Service)
    தற்கொலைத் தடுப்பு மற்றும் மனநலத்துக்கான, 24 மணி நேர ஆலோசனைகளை வழங்குகிறது. தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்ட எவருக்கும், தொலைபேசி, இணையம்External Link மற்றும் காணொளி மூலம் ஆதரவு வழங்கப்படுகிறது. 1300 659 467 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்
  • விக்டோரியக் காவல்துறை
    இன மற்றும் மத இழிவுபடுத்தல் (racial and religious vilification) அல்லது துஷ்பிரயோகம் (abuse) போன்ற ஒரு கடுமையான சம்பவத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவசர உதவிக்கு மூன்று பூஜ்யம் (000) என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். விக்டோரியக் காவல்துறையானது, தவறான எண்ணத்தால் தூண்டப்பட்ட குற்றத்தை (prejudice motivated crime) எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதைப் பற்றி, அவர்களின் police.vic.gov.au/prejudice-and-racial-and-religious-vilificationExternal Link என்ற இணையதளத்தில் மேலும் அறிந்து கொள்ளவும்
  • 'பியாண்ட் ப்ளூ' (Beyond Blue)
    பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression) மற்றும் தற்கொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 24 மணிநேர ஆதரவைExternal Link வழங்குகிறது. 1300 224 636 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் (Torres Strait Islander) மக்களுக்கான தனிப்பட்ட ஆதார வளங்களையும்External Link 'பியாண்ட் ப்ளூ' (Beyond Blue) கொண்டுள்ளது
  • 'ஹெட்ஸ்பேஸ்' (Headspace)
    மனநலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய தகவல் மற்றும் ஆதரவை வழங்குகிறதுExternal Link . 1800 650 890 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 12 - 25 வயதுடையவர்களுக்கு, முன்னதாகத் தலையீடு செய்யும் (early intervention) மனநலச் சேவைகளையும் 'ஹெட்ஸ்பேஸ்' (Headspace) வழங்குகிறது. ஆதார வளங்களையும், குறிப்பாக பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் (Torres Strait Islander) மக்களுக்காகExternal Link 'ஹெட்ஸ்பேஸ்' (Headspace) வழங்குகிறது
  • 'ரீச்அவுட்' (ReachOut)
    25 வயதுக்குட்பட்டவர்களுக்காக, மனநலப் பிரச்சினைகள் பற்றிய ஆதரவைExternal Link வழங்குகிறது
  • 'ப்ளூ நாட்' (Blue Knot) அறக்கட்டளை
    இலவச, சிறப்பு ஆலோசனை ஆதரவுExternal Link , மற்றும் ஊனமுற்றோர், அவர்களது குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான பரிந்துரை சேவை போன்றவற்றை 'ப்ளூ நாட்' (Blue Knot) வழங்குகிறது. 1800 421 468 (காலை 9 மணி - மாலை 6 மணி AEDT திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி - மாலை 5 மணி AEDT சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில்) என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். நீங்கள் காது கேளாதவராக இருந்தால், அல்லது செவித்திறன் அல்லது பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவராக இருந்தால், தேசியத் தொடர் சேவையை (National Relay Service), 133 677 என்ற எண்ணில் அழைத்து, நீங்கள் அழைக்க விரும்பும் எண்ணாக 02 6146 1468 -ஐக் கொடுக்கவும். மொழிபெயர்த்துரைப்பாளர் வேண்டுமெனக் கோரலாம்
  • ஊனமுற்ற குழந்தைகளுக்கான சங்கம்
    விக்டோரியாவில், ஊனமுற்ற குழந்தைகளின் குடும்பங்களுக்குத் தகவல், ஆதரவு மற்றும் வழக்காடுதல் (advocacy) போன்றவற்றை வழங்குகிறது. (03) 9880 7000 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் அல்லது acd.org.auExternal Link என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
  • 'வெல்மாப்' (WellMob)
    சமூக மற்றும் உணர்ச்சிபூர்வ நல்வாழ்வை (social and emotional wellbeing) மையமாகக் கொண்டு, பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் மக்களால் (Torres Strait Islander people) உருவாக்கப்பட்ட இணைய ஆதாரவளங்களைExternal Link வழங்குகிறது. இதில் இணையதளங்கள் (websites), செயலிகள் (apps), வலையொலிகள் (podcasts), காணொளிகள் (videos), சமூக ஊடகங்கள் (social media) மற்றும் இணைய ஆலோசனை (online counselling)External Link ஆகியவை அடங்கும். (08) 9370 6336 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்
  • 'யார்னிங் சேஃப்அன்ஸ்ட்ராங்க்' (Yarning SafeNStrong)
    பழங்குடியினர் (Aboriginal) மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் மக்களுக்காக (Torres Strait Islander peoples), விக்டோரியா முழுவதும் 24/7 சமூக மற்றும் உணர்ச்சிபூர்வ நல்வாழ்வு உதவி இணைப்பை (social and emotional wellbeing helpline) வழங்குகிறது. 1800 95 95 63 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும், ysns@vahs.org.au என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும், அல்லது vahs.org.au/yarning-safenstrong/External Link என்ற இணையதளத்துக்குச் செல்லவும்

Downloadable factsheet

Reviewed 06 December 2021

Was this page helpful?