JavaScript is required

'ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளி' (Early Start Kindergarten) - தமிழ் (Tamil)

நீங்கள் ஓர் அகதியர் அல்லது புகலிடம் கோருவோர் பின்புலத்தில் இருந்து வருபவராக இருந்தால், நீங்கள் 'ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளிக் கல்வி' (ESK)-இற்குத் தகுதி பெறக்கூடும். உங்கள் குழந்தைக்கு ஒவ்வொரு வாரமும் அதிகபட்ச இலவச மழலையர் திட்ட நேரங்களை நீங்கள் பெறுவதை உறுதிசெய்ய, 'ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளிக் கல்வி' (ESK) உதவக்கூடும்.

எப்படி விண்ணப்பிப்பது

தகுதிவாய்ந்த ஆசிரியர் ஒருவரால் வழங்கப்படும் அனைத்து மழலையர் திட்டங்களிலும் 'ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளிக் கல்வி' (ESK) கிடைக்கிறது. உங்களுக்கு அருகிலுள்ள மழலையர் பள்ளியைத் தொடர்புகொண்டு, மழலையர் பள்ளியின் 'ஆரம்பகால தொடக்கக்க மழலையர் பள்ளிக் கல்வி' (ESK) மானியத்தை அணுகிப் பெற வேண்டுமெனக் கேட்டு, உங்கள் குழந்தையைச் சேர்க்க நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் மொழியில் உங்களுக்கு உதவிட இலவச மொழிபெயர்ப்பு சேவையைக் குழந்தைகள் சேவைகளால் பெற முடியும்.

உதவி பெறுவதற்கு, 1800 338 663 என்ற ‘கல்வித் திணைக்கள’த்தின் ‘மூன்று-வயது மழலையர் பள்ளி விசாரிப்பு அழைப்பு’ இலக்கத்தினை நீங்கள் அழைக்கலாம், அல்லது உங்கள் உள்ளூராட்சி மன்றத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். உங்கள் மொழியில் உதவி பெற்றிட, ‘தேசிய மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’யை 131 450 என்ற எண்ணில் நீங்கள் அழைத்து, உங்கள் உள்ளூராட்சி மன்றத்தின் எண்ணை அல்லது கல்வித் திணைக்களத்தின் எண்ணை அழைக்குமாறு மொழிபெயர்த்துரைப்பாளரிடம் கேளுங்கள், அதன்பின் மொழிபெயர்த்துரைப்பாளர் தொலைபேசி இணைப்பில் இருந்தவாறு உங்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வார்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும:

மூன்று வயது மழலையர் பள்ளியில் சேரும் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்பு மூன்று வயதை எட்டினால் குழந்தைகள் ESK-க்கு தகுதியுடையவர்களாக இருப்பர். ‘எப்போது பதிவு செய்ய வேண்டும்’ என்பதைப் பாருங்கள்.

உங்கள் குழந்தை ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை பிறந்திருந்தால், மூன்று வயது மழலையர் பள்ளியை எந்த ஆண்டு தொடங்குவது என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் குழந்தை மூன்று வயது மழலையர் பள்ளியை 3 வயதாகும் அதே ஆண்டில் அல்லது 4 வயதாகும் அதே ஆண்டில் தொடங்கலாம். உங்கள் குழந்தை 3 வயது நிரம்பிய ஆண்டில் மூன்று வயது மழலையர் பள்ளிக்குச் சென்றால், அவர்கள் 5 வயது ஆன ஆண்டில் பள்ளிக்குச் செல்வார்கள். உங்கள் குழந்தைக்கு 4 வயது ஆகும் ஆண்டில் மூன்று வயது மழலையர் பள்ளிக்கு அனுப்ப நீங்கள் தேர்வுசெய்தால், அவர்கள் 6 வயது ஆகும் ஆண்டில் பள்ளிக்குச் செல்வார்கள்.

‘ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளி கல்வி’ (ESK)-இற்கு உங்கள் குழந்தை எப்போது தகுதி பெறுகிறது என்பதைக் கண்டறிவதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் ‘கல்வித் திணைக்களம்’, உங்கள் உள்ளூராட்சி மன்றம், உங்களுக்குப் பிரசவம் பார்த்த குழந்தை சுகாதாரச் செவிலியர் அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளி அல்லது உங்கள் பகுதியில் உள்ள பின்வரும் அமைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்:

  • மூன்று வயதினருக்கான மழலையர் பள்ளி விசாரிப்பு இணைப்பு எண் 1800 338 663
  • 'செயின்ட் லாரன்ஸ் சகோதரத்துவம்’ (Brotherhood of St Laurence) 03 9483 1183
  • ‘ஃபவுண்டேஷன் ஹவுஸ்’ (Foundation House) 03 9389 8900
  • ‘எஃப்.கே.ஏ. குழந்தைகள் சேவைகள்’ (Fka Children’s Services) 03 9428 4471
  • ‘VICSEG புதிய எதிர்காலங்கள்’ (VICSEG New Futures) 03 9383 2533

என் குழந்தை நான்கு வயது மழலையர் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா?

ஆம், ‘ஆரம்பகாலத் தொடக்க மழலையர் பள்ளி’ சேவையைப் பெற்ற குழந்தைகள் இலவச அல்லது குறைந்த விலை நான்கு வயது மழலையர் பள்ளிக்கும் தகுதியுடையவர்களாவர். 2025 ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு வயது மழலையர் பள்ளி படிப்படியாக ‘முன்-தயார்’ (Pre-Prep) நிலைக்கு மாறி வருகிறது. 2026 ஆம் ஆண்டில், பின்வரும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 25 மணிநேரம் வரை ‘ப்ரீ-ப்ரெப்’ (Pre-Prep) கல்வி கிடைக்கும்:

  • அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்
  • ஆபொரிஜினிப் பழங்குடியினர் மற்றும்/அல்லது டோரஸ் நீரிணைத் தீவுவாசி என அடையாளம் காணவும்
  • ‘குழந்தைப் பாதுகாப்பு’(child protection)டன் தொடர்புகொண்ட குடும்பத்தினர்.

முந்தைய ஆண்டில் ESK மூலம் பதிவு செய்வது, விக்டோரியாவில் எங்கு வசித்தாலும், உங்கள் குழந்தை ஒவ்வொரு வாரமும் அதிகரித்த ‘ப்ரீ-ப்ரெப்’ (Pre-Prep) கல்வி நேரங்களை அணுகிப் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறது. முந்தைய ஆண்டில் ESK-இல் சேராவிட்டாலும், குடும்பங்கள் ‘ப்ரீ-ப்ரெப்’ (Pre-Prep) கல்விக்குத் தகுதி பெறுவார்கள்.

Updated