JavaScript is required

இலவச பாலர் பள்ளி (About Free Kinder) - தமிழ் (Tamil)

இலவச மழலையர்பாலர் பள்ளியானது விக்டோரியா முழுவதிலும் பங்கேற்கும் சேவைகளில் மூன்று மற்றும் நான்கு வயதினருக்கான மழலையர் பள்ளி அல்லது ப்ரீ-ப்ரெப் திட்டங்களில் கிடைக்கின்றது. இதில் நீண்டநேரப் பகல் பராமரிப்பு மற்றும் தனியான (அமர்வு என்றும் அழைக்கப்படுகிறது) மழலையர் சேவைகள் இரண்டும் அடங்கும்.

குடும்பங்களுக்கான சேமிப்பு

பங்கேற்கும் அமர்வுரீதியான மழலையர் பள்ளியில் குழந்தைகளைப் பதிவு செய்திருக்கும் குடும்பங்கள் ஒரு இலவசத் திட்டத்தைப் பெறுவார்கள்.

பங்கேற்கும் நீண்டநேர பகல் பராமரிப்பு மையத்தில் குழந்தைகளைப் பதிவு செய்திருக்கும் குடும்பங்கள் வருடாந்திர கட்டணத்தில் ஈட்டுத்தொகை பெறுவார்கள்.

இலவச பாலர் பள்ளிக் கல்விக்கான தகுதிகள்

‘இலவச பாலர் பள்ளிக் கல்வி’ என்பது ஒவ்வொருவருக்குமானதாகும்.

இதைப் பெறுவதற்குத் தகுதிபெற குடும்பங்கள் ஒரு சுகாதாரப் பராமரிப்பு அட்டை (Health Care Card) அல்லது ஓய்வூதிய அட்டை, ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லது முகவரிச் சான்று வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ‘இலவச பாலர்பள்ளிக் கல்வி’யைப் பெறுவதற்கு நீங்கள் ‘ஆஸ்திரேலிய அரசாங்க குழந்தைப் பராமரிப்பு உதவித்தொகை’ (Australian Government Child Care Subsidy (CCS))-க்குத் தகுதிபெற்றவராகவும்கூட இருக்கவேண்டியதில்லை.

ஒரு நேரத்தில் ஒரே மழலையர் சேவையில் மட்டுமே நீங்கள் இலவச பாலர் பள்ளிக் கல்வியைப் பெற முடியும் இலவச பாலர் பள்ளிக் கல்வியை நீங்கள் பெற விரும்பும் சேவையைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றில் கையெழுத்து இடுமாறு உங்கள் மழலையர் சேவை உங்களிடம் கேட்கும். உங்கள் குழந்தை ஒன்றுக்கு மேற்பட்ட மழலையர் சேவைகளில் கலந்து கொண்டால், நீங்கள் இலவச பாலர் பள்ளிக் கல்வியை எங்கு பெற விரும்புகிறீர்கள் என்பதை ஒவ்வொரு சேவைக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இலவச பாலர் பள்ளிக் கல்விக்கான நிதியுதவியை எவ்வாறு பெறுவது

இலவச பாலர் பள்ளிக் கல்வியை வழங்கும் மழலையர் சேவைகள் விக்டோரிய அரசிடம் இருந்து நேரடியாக நிதியுதவி பெறுகின்றன. அதாவது குடும்பங்கள் சேமிப்பைக் கோரிப் பெற வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக உங்கள் கட்டணம் குறைக்கப்படும். அமர்வுக்கான மழலையர் அமைப்பில் உங்கள் திட்டம் இலவசம்.

நீண்டநேரப் பகல் பராமரிப்பு மழலையர் திட்டங்களைப் பயன்படுத்தும் குடும்பங்கள், இலவச மழலையர் திட்டத்தின் ஒவ்வொரு கட்டணச் சுழற்சியிலும் கிடைக்கும் சேமிப்பையும் விலைப்பட்டியல்களில் தெளிவாகப் பெயரிடப்பட்ட ‘விக்டோரிய அரசு இலவச மழலையர் திட்ட ஈடு’ (‘Victorian Government Free Kinder offset') மூலம் பார்க்க முடியும்.

உங்களின் சொந்தப் பணத்திலிருந்து நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு கட்டணக்குறைப்பு பிரயோகிக்கப்படும் விதம்

வருடம் முழுவதும் தவறாமல் உங்களின் கட்டணத்திற்கு இந்த ‘இலவச பாலர்பள்ளிக் கல்வி’க் கட்டணக்குறைப்பு பிரயோகிக்கப்படும் (உதாரணமாக, வாராவாரம் அல்லது இரு வாரங்களுக்கு ஒரு தடவை). உங்களின் கட்டணச்சீட்டில் இந்தத்தொகை, 'விக்டோரிய அரசாங்க ‘இலவச பாலர்பள்ளிக் கல்வி’க் கட்டணக்குறைப்பு' (Victorian Government Free Kinder offset’) எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தில் கட்டணக்குறைப்பு (offset) எவ்வாறு பயன்படுத்தப்படும் மற்றும் உங்கள் விலைப்பட்டியலில் (invoice) இது எவ்வாறு காட்டப்படும் என்பது பற்றிய தகவல்களுக்குத் தயவுசெய்து உங்கள் மழலையர் சேவையுடன் நேரடியாகப் பேசவும். ஒரு வாரத்திற்கு உங்களுடைய குழந்தை 15 மணி நேரத்திற்கும் மேலான கல்வியைப் பெற்றால், இந்த மேலதிக மணித்தியாலங்கள் கட்டணக்குறைப்பிற்குள் அடங்காது.

காமன்வெல்த் குழந்தை பராமரிப்பு மானியத்திற்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், அது முதலில் பயன்படுத்தப்படும். அதாவது CCS-க்குப் பிறகு, மற்றும் இலவச பாலர்பள்ளிக் கல்விக் கட்டணக்குறைப்புக்குப் பிறகு மீதமுள்ள தொகையை மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு:

  • ஒரு 4-வயதுக் குழந்தை, வாரத்திற்கு 3 நாட்கள் மழலையர் திட்டம் ஒன்றுடன் நீண்டநேரப் பகல் பராமரிப்புக்குச் செல்கிறது.
  • இந்தச் சேவை வாரத்திற்கு 3 நாட்களுக்கு $360 கட்டணமாகப் பெறுகிறது (பாலர் பள்ளி நேரங்கள் மற்றும் கூடுதல் பராமரிப்பு நேரங்கள் உட்பட).
  • வாரத்திற்கு $252 CCS ஆக குடும்பம் பெறுகிறது.
  • 2025 இல், 40 வாரங்களுக்கு $2,101 இலவச பாலர் பள்ளி ஈட்டுத்தொகையை இந்தச் சேவை செயல்படுத்துகிறது (வாரத்திற்கு $52.53).
  • CCS மற்றும் இலவச பாலர் பள்ளி ஈட்டுத்தொகைக்குப் பிறகு குடும்பம் $55.478 செலுத்துகிறது.

தயவு செய்து கவனிக்கவும். இது ஓர் உதாரணம் மட்டுமே, தனிப்பட்ட சூழல் மற்றும் வருடாந்திர இலவச பாலர் பள்ளி ஈட்டுத் தொகையைப் பொறுத்து தொகை வேறுபடும்.

Updated