எப்படி, எப்போது பதிவு செய்வது (How and when to enrol) - தமிழ் (Tamil)

சேர்க்கைச் செயல்முறை பற்றி உங்கள் உள்ளூராட்சி மன்றத்தில் அல்லது மழலையர் பள்ளிச் சேவையிடம் பேசுங்கள். நீங்கள் மூன்று-வயதினருக்கான மழலையர் பள்ளி விசாரணை அழைப்பை 1800 338 663 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம் அல்லது 3YO.kindergarten@education.vic.gov.au என்ற முகவரிக்கு மின்னஞ்சலும் செய்யலாம். மொழியில் உதவி பெறுவதற்கு அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரைப் பெறுவதற்கு, முதலில் 131 450 என்ற எண்ணில் அழைக்கவும்.

'முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளி' (Early Start Kindergarten)

அகதியர் அல்லது புகலிடம் வேண்டுவோர் பின்னணியில் இருந்து வந்துள்ள குழந்தைகள் கூடுதல் உதவிகளைப் பெறலாம், மேலும் முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளி மூலம் மழலையர் பள்ளிக்குச் செல்வதற்கான முன்னுரிமையைப் பெறலாம். நீங்கள் உங்கள் குழந்தையைப் பதிவு செய்யும் போது, உங்கள் உள்ளூர் சேவையில் முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளியைப் பற்றி நீங்கள் கேட்கலாம் அல்லது மேலும் தகவல்களுக்கு முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளிக்குச்செல்லலாம்.

எப்போது பதிவு செய்ய வேண்டும்

விக்டோரியாவில், குழந்தைகளுக்கு 3 வயது ஆகும்போது, அவர்களைக் குழந்தைகள் திட்டம் ஒன்றில் சேர்க்கலாம். உங்கள் குழந்தை எந்த ஆண்டில் மூன்று மற்றும் நான்கு வயது குழந்தைகள் அமைப்பில் சேரலாம் என்பதைக் கண்டறிய நீங்கள் அவர்களின் பிறந்த தேதியை ஆரம்ப வயது கணிப்பானில் உள்ளீடு செய்யவும்,

உங்கள் குழந்தையின் பிறந்த நாள் ஜனவரி 1 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் இருந்தால், அவர்கள் எந்த வருடத்தில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிப்பார்கள், எந்த வயதுக்குரிய குழந்தைகள் அமைப்பில் சேருவார்கள் என்பதை நீங்கள் கணித்துக்கொள்ள வேண்டியதிருக்கும். உங்கள் குழந்தை ஐந்து அல்லது ஆறு வயதை எட்டும்போது பள்ளிக்குச் செல்லலாமா என்பதை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.

குழந்தைகள் திட்டம் ஒன்றைக் கண்டறியவும்

அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் திட்டங்களை வழங்கும் சேவைகளைக் கண்டறிய, குழந்தைகள் திட்டத்தைக் கண்டறியும் இணையதளம் ஒன்றைப் பார்வையிடவும் (குழந்தைகள் திட்டம் ஒன்றைக் கண்டறியவும் - கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், விக்டோரியா (educationapps.vic.gov.au) ). மழலையர் பள்ளியில் ஓர் இடத்தைக் கண்டறிய, உங்கள் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மழலையர் பள்ளிச் சேவைகள் உதவும்.

'கிண்டர் டிக்'கைத் (Kinder Tick) தேடிப் பார்க்கவும்:

விக்டோரியக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மழலையர் திட்டத்தைக் கண்டறிய 'கிண்டர் டிக்' உதவுகிறது.

உங்கள் உள்ளூர் மழலையர் பள்ளிச் சேவையில், சேவை அல்லது மையத்தின் கட்டிடம் அல்லது மைதானத்தில், அவர்களின் இணையதளத்தில் அல்லது அவர்களின் தகவல் தொடர்பான பொருட்களில் 'கிண்டர் டிக்' சின்னத்தைத் தேடிப் பார்க்கவும்.

Updated