JavaScript is required

ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் தொழில் வாய்ப்புகள் (Career opportunities in early childhood education) - தமிழ் (Tamil)

ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியில் புதிய ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள்

கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் மாறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் உட்பட, அனைத்து விக்டோரியக் குடும்பங்களுக்கும் கிடைக்கும் பலாபலன்களை மேம்படுத்துவதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் விக்டோரிய அரசாங்கம் பற்றுறுதி கொண்டுள்ளது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்ற, ‘பெஸ்ட் ஸ்டார்ட், பெஸ்ட் லைஃப்’ (Best Start, Best Life) எனும் கல்வித் திட்டச் சீர்திருத்தம் ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்விப் பணியாளர்களைக் கணிசமாக விரிவுபடுத்த $370 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்யும்.

மாநிலம் முழுவதிலுமிருந்து 11,000 -இற்கும் மேற்பட்ட கூடுதல் ஆரம்பகாலக் குழந்தைப் பருவ ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கவும் அவர்களுக்கு ஆதரவுதவியளிக்கவும் பல்வேறு பணியாளர்-படை நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் ஒரு வாழ்க்கைத்தொழிலை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் அனைத்துப் பின்புலங்களையும் சார்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளுக்கு நிதி-சார் மற்றும் நிதி-சாரா ஆதரவுதவிகள் இரண்டும் கிடைக்கின்றன.

நீங்கள் எப்படி ஒரு ஆரம்பகாலக் குழந்தைப் பருவ ஆசிரியர் அல்லது கல்வியாளராக முடியும் என்பது பற்றி மேலும் அறிய கீழே உள்ள தகவல்களைப் பாருங்கள்.

ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் ஒரு வாழ்க்கைத்-தொழிலை ஏற்படுத்திக்கொள்ளல்

ஒரு ஆரம்பகாலக் குழந்தைப்பருவ ஆசிரியர் அல்லது கல்வியாளர் ஆக ஆர்வமுள்ளவர்களுக்குப் பல்வேறு படிப்புத் விருப்பத் தேர்வுகள் மற்றும் நிதியுதவிகள் கிடைக்கும். மேலதிகத் தகவலுக்கு, இங்கு செல்க: ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் படிக்கவும் வேலை செய்யவும் நிதி உதவி (Financial support to study and work in early childhood) | vic.gov.au.

ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் தொழில் வாய்ப்புகள் மற்றும் படிப்புக்கான நிதி உதவி பற்றிய கூடுதல் தகவலுக்குச் செல்லுங்கள், Become an early childhood teacher or educator.

வேலைவாய்ப்பு

ஆரம்பக் குழந்தைப்பருவக் கல்வியில் வேலைவாய்ப்பு என்பது, தனிப்பட்ட சேவை மேலாளர்கள் மற்றும் மழலையர் திட்டங்களை வழங்குபவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

என்னென்ன வேலைகள் உள்ளன என்பதைப் பார்க்கவும், இந்தத் துறையில் பணிபுரிபவர்களின் விவர ஆய்வுகளைப் படிக்கவும், பின்வரும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் Early Childhood Jobs website.

கூடுதல் ஆதரவுதவிகளை வழங்கும் ஆரம்பகாலக் குழந்தைப் பருவ கல்வி படிப்புகளுக்கு, இங்கு செல்க: Early Childhood Tertiary Partnerships program | vic.gov.au.

Updated