JavaScript is required
Victoria is currently experiencing significant bushfire risk. Please stay informed at emergency.vic.gov.au
emergency.vic.gov.au

மரியாதைக்குரியவர்களாக, பாதுகாப்பாக, ஈடுபாட்டுடன்: மாணவர் நடத்தையில் உதவுவதற்காகப் பகிரப்பட்ட எதிர்பார்ப்புகள் - தமிழ் (Tamil)

அனைவரும் சேர்ந்திருக்கும், கற்றுக் கொள்ளும், மற்றும் வளமுறும் பாதுகாப்பான பள்ளிகளை ஒன்றாக நாங்கள் உருவாக்குகிறோம்.

பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாகச் செயல்படும்போது, நாம் மிகச் சிறந்த பலன்களை அடைகிறோம். அனைத்து மாணவர்களும் சேர்ந்திருக்க, கற்றுக்கொள்ள மற்றும் வளமுற உதவும் பள்ளிச் சூழல்களை உருவாக்குவதற்கு இத்தகைய கூட்டாண்மைகள் அவசியமாகும். ஒரு பெற்றோர் மற்றும் பராமரிப்பாளராக, உங்கள் குழந்தை பகிரப்பட்ட நடத்தை எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய உதவுவதில் நீங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.

மாணவர்கள் எதிர்பார்க்கப்படும் நடத்தைகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள்

பள்ளியில், அனைத்து மாணவர்களும் மரியாதைக்குரியவர்களாகவும், பாதுகாப்பாகவும், ஈடுபாட்டுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடத்தைகள் பள்ளிகளை அனைவரும் வெற்றிபெறக்கூடிய இடமாக மாற்றுவதற்கு உதவுகின்றன.

மாணவர்கள் மரியாதைக்குரியவர்களாகவும், பாதுகாப்பாகவும், ஈடுபாட்டுடனும் இருப்பதன் மூலம் இந்த நடத்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.

மரியாதைக்குரியவர்களாக

  • ஊழியர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் பள்ளி விதிகளைப் பின்பற்றுதல்.
  • பள்ளிச் சொத்து மற்றும் பிறரது உடைமைகளைப் பராமரித்தல்.
  • மரியாதையான வார்த்தை மொழியைப் பயன்படுத்துதல்.

பாதுகாப்பாக

  • தங்களையும் மற்றவர்களையும் தீங்கிலிருந்து பாதுகாப்பாக வைத்திருத்தல்.
  • தாங்களோ அல்லது வேறு யாராவதோ நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டால் அதற்காகக் குரலெழுப்புவது, அல்லது ஒரு வயது வந்தோரிடம் உதவி கேட்பது.
  • பாதுகாப்பான மற்றும் தேவையான பொருட்களை மட்டுமே பள்ளிக்குக் கொண்டு வருவது.

ஈடுபாட்டுடன்

  • ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்வது, சரியான நேரத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது.
  • பங்கேற்பது, தங்களால் முடிந்த அளவுக்குச் செயல்படுவது, மற்றும் தங்களுக்குத் தேவைப்படும்போது உதவி கேட்பது.
  • கைப்பேசி பற்றிய கொள்கை உட்பட பள்ளியின் கொள்கைகளை நன்கு அறிந்து அவற்றைப் பின்பற்றுவது.

பெற்றோரும் பராமரிப்பாளர்களும் எவ்வாறு உதவ முடியும்

நேர்மறையான நடத்தையை முன்மாதிரியாக்கி ஊக்குவிப்பதன் மூலம், உங்கள் குழந்தை பள்ளியில் வெற்றிபெறத் தேவையான திறன்களையும் பழக்கவழக்கங்களையும் வளர்க்க உதவுகிறீர்கள். குடும்பங்களும் பள்ளிகளும் இணைந்து செயல்படும்போது, மாணவர்கள் மிகச்சிறப்பாகச் சாதிக்க முடியும்.

பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் பின்வரும் வகையில் தங்கள் குழந்தையின் நடத்தையை ஆதரிப்பதில் உதவமுடியும்:

மரியாதைக்குரியவர்களாக

  • பள்ளியின் விதிகளை நன்கு அறிந்து வீட்டிலேயே அவர்களுக்கு ஆதரவளித்தல்.
  • பள்ளி ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் பிறரிடம் நீங்கள் நேரிலும், இணையத்திலும், அவர்களிடத்தில், மேலும் அவர்களைப் பற்றி எவ்வாறு பேசுகிறீர்கள் என்ற விதத்தில் மரியாதைக்குரிய நடத்தையை முன்மாதிரியாக்குதல்.
  • உங்கள் வருத்தங்களை ஆரம்பத்திலேயே எழுப்பவும், தீர்க்கவும் பள்ளியின் செயல்முறைகளைப் பயன்படுத்துதல்.

பாதுகாப்பாக

  • உங்கள் குழந்தைக்குப் பள்ளியில் பிரச்சினைகள் இருந்தால், அதைப் புரிந்துகொண்டு தீர்ப்பதற்கு ஊழியர்களுடன் இணைந்து செயலாற்றுதல்.
  • பள்ளியில் நம்பகமான பெரியவர் ஒருவரிடம் உதவி கேட்பது சரிதான் என்பதை உங்கள் குழந்தை அறிந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தல்.
  • உங்கள் குழந்தையுடன் பேசுவதன் மூலமும், ஆரம்பத்திலேயே வருத்தங்களை நிவர்த்தி செய்வதன் மூலமும் அவர்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தல்.

ஈடுபாட்டுடன்

  • உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்ல உதவுதல் - ஒவ்வொரு நாளும் முக்கியமானது.
  • உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் நல்வாழ்வை ஆதரிக்க பள்ளி ஊழியர்களுடன் தொடர்புகொள்ளுதல் மற்றும் இணைந்து பணியாற்றுதல்.
  • உங்கள் குழந்தையின் நாள் எவ்வாறு இருந்தது, மற்றும் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுதல், அவர்களின் முயற்சி மற்றும் முன்னேற்றத்தைக் கவனிப்பதன் மூலம் அவர்களின் கற்றலை ஊக்குவித்தல்.

சில மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் பள்ளி வருகைப் பிரச்சினையில் அல்லது பள்ளி வர மறுக்கும் குழந்தைக்கு உதவிடும் பிரச்சினையில் போராடுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். உதவக்கூடிய சில ஆதாரவளங்கள் இங்கே:

நடத்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் பள்ளிகள் மாணவர்களுக்கு எவ்வாறு ஆதரவு தருகின்றன

நேர்மறையான நடத்தையைக் கற்பிப்பதன் மூலமும் வலுப்படுத்துவதன் மூலமும், பள்ளிகள் கல்வி மற்றும் நல்வாழ்வை மையமாகக் கொண்டு நேர்மறையான, பாதுகாப்பான மற்றும் நியாயமான கற்றல் சூழல்களை உறுதி செய்கின்றன.

மரியாதையுடன், பாதுகாப்பாக மற்றும் ஈடுபாட்டுடன் இருப்பதன் மூலம் குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் ஆதரவு தருகின்றன.

மரியாதைக்குரியவர்களாக

  • மாணவர்களுக்குப் பள்ளி விதிகள் மற்றும் நேர்மறையான நடத்தை எதிர்பார்ப்புகளைக் கற்பித்தல் மற்றும் வெளிப்படுத்துதல்.
  • எதிர்பார்க்கப்படும் மரியாதைக்குரிய நடத்தையை வெளிப்படையாகக் கற்பித்தல், முன்மாதிரியாக்குதல் மற்றும் ஒப்புக்கொள்ளுதல்.
  • அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் ஒத்துழைப்புடனும், நேர்மறையாகவும் ஈடுபடுதல்.

பாதுகாப்பாக

  • கொடுமைப்படுத்துதலைத் தடுக்கவும், எதிர்வினையாற்றவும் மற்றும் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் தெளிவான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருத்தல்.
  • மாணவர்களுக்கு முன்கூட்டியே கூடுதல் ஆதரவை வழங்குதல், மற்றும் மாணவர்கள் குரலெழுப்புவதற்கும், உதவி பெறுவதற்கும் ஆதரவளித்தல்.
  • உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பாதுகாப்பான பள்ளிச் சூழலைப் பராமரிக்கப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்தல்.

ஈடுபாட்டுடன்

  • அனைத்து மாணவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சான்றுகள் அடிப்படையிலான, உள்ளடக்கியக் கல்வியை வழங்குதல்.
  • மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் பள்ளி வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான முடிவுகளில் தங்கள் கருத்தைத் தெரிவிக்க அதிகாரம் அளித்தல்.
  • அனைத்து மாணவர்களும் கவனிக்கப்படுகிறார்கள், கேட்கப்படுகிறார்கள் மற்றும் மதிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிசெய்ய வலுவான, நம்பகமான உறவுகளை உருவாக்குதல்.

கல்வித் திணைக்களம் பள்ளிகளுக்கு நேர்மறையான மாணவர் நடத்தையை உருவாக்குவதற்கும், பள்ளிகள், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இடையே நேர்மறையான உறவுகளை வளர்ப்பதற்கும் தேவையான ஆதாரவளங்களையும் ஆதரவையும் வழங்குகிறது.

பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் உதவிக்காக எங்கே செல்லலாம்

உங்கள் குழந்தையின் நல்வாழ்வு, நடத்தை அல்லது பாதுகாப்பு குறித்து நீங்கள் கவலைப்பட்டால், நீங்கள்:

  • முதல் படியாக உங்கள் குழந்தையின் ஆசிரியரிடமோ அல்லது அடையாளப்படுத்தப்பட்ட தொடர்பு நபரிடமோ பேசி, உங்கள் வருத்தங்களைத் தெரிவிப்பதற்கான பள்ளியின் செயல்முறையைப் பின்பற்றலாம்.
  • பள்ளியின் ஆதரவையோ அல்லது பரிந்துரையையோ கேட்கலாம் - அவர்கள் உங்களை நல்வாழ்வு ஊழியர்கள் அல்லது சிறப்பு சேவைகளுடன் இணைக்க முடியும்.
  • உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், கல்வித் திணைக்களத்தின் மண்டல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

பின்வரும் ஆதாரவளங்களும் கிடைக்கின்றன:

Updated